tamilnadu

img

பாஜக ஆட்சியில் ஏழைகளின் வலி, வேதனை அதிகரித்து விட்டது....

லக்னோ:
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இதையொட்டி, ஆங்காங்கே கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றன,இந்நிலையில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, பாஜக அரசின் 2-ஆம் ஆண்டு தொடக்கம் குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.அதில், “மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு 2-வது முறையாக ஆட்சியில் அமர்ந்து ஓராண்டை நிறைவு செய்கிறது. ஏராளமான வாக்குறுதிகள் மக்களிடம்அளிக்கப்பட்டன. ஆனால், பாஜக அரசின்ஆட்சியில் எங்கும் சர்ச்சைகளே நிரம்பி வழிகின்றன. ஏழைகள், விவசாயிகள், வேலையில்லாதோர், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என நாட்டு மக்களின் வாழ்க்கை முன்புஇருந்ததைவிட வலியும், வேதனையும் மிகுந்ததாக மாறியுள்ளது. வருத்தமாகவும், எளிதில் மறக்க முடியாததாகவும் இருக்கிறது.

ஆதலால், மத்திய அரசு தனது கொள்கைகளையும், பணியாற்றும் விதத்தையும் மறுஆய்வு செய்து வெளிப்படைத் தன்மையுடன்செயலாற்ற வேண்டும். குறைபாடுகளைக் களைய வேண்டும்.இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

;